Monday, February 8, 2010

hai

hai

பெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற்சி

யோகாப்பயிற்சியின் சாதனை:

1962 ஆம் வருடம் சென்னையில் பிறந்த ஒரு ஆண் குழந்தை நீலநிறக்குழந்தை என மருத்துவர்களால் கைவிடப்பட்டது.அந்த ஆண்குழந்தையின் குரலானது 1977 முதல் பெண்குரலாக இருந்தது.பல ஸ்பீச் தெரபிஸ்ட்டுகளின் சிகிச்சையில் குணமடையாமல் கி.பி. 2004 ஆம் ஆண்டு வரை பெண் குரலாகவே இருந்தது.

கி.பி.2004 ஆம் ஆண்டில் ஒரு யோகாசன ஆசான் அவர்களின் முயற்சியால் வெறும் மூன்றே மாதங்களில் யோகாசனப்பயிற்சியின் மூலமாக அந்த
ஆணின் பெண் குரல் ஆண் குரலாக மாறிவிட்டது.இந்த அதிசயம் சென்னையில் தான் நடைபெற்றுள்ளது.
நமது புராதன இந்துக்கலைகள் இன்னும் சிரஞ்ஜீவித்தன்மையோடு இருப்பதற்கு இதுபோன்ற
சாதனைகளே காரணம்.

இப்படி யாருக்கு பெண் குரல் ஆண் குரலாக மாறியது? என்பதை அறிய விரும்பும் ஆன்மீகக்கடல் அன்பர்கள் எம்மைத் தொடர்புகொண்டால் மின் அஞ்சல் விளக்கம் தரப்படும்.

Wednesday, February 3, 2010

செல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை வழிபாடு


யார் எந்தக்கடவுளை வழிபட்டால் சிறப்பு? நன்றி:பால ஜோதிடம்,பக்கம் 26,27,வெளியீடு 8.2.2010.

அசுவினி நட்சத்திரக்காரர்கள் அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று கூத்தனூர்
சென்று சரஸ்வதியை வணங்கினால் வித்தை விருத்தி அடையும்.

பரணியில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தன்று கதிராமங்கலம் சென்று
ராகு காலத்தில் ஸ்ரீதுர்கையை வழிபட்டால் சுகம் பெருகும்.

கார்த்திகையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திரு அண்ணாமலை
கிரிவலம் வந்தால் அக்னி பகவான் அருள் பெற்று பொருளாதார மேன்மை
அடைவர்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் அமாவாசையன்று கும்பகோணம் சென்று
ஸ்ரீபிரம்மாவை வழிபட தடைகள் பல விலகிவிடும்.

மிருக சீரிடம் நட்சத்திரத்தில் உதயமானவர்கள் திங்கட் கிழமை மற்றும்
பவுர்ணமி நாட்களில் திங்களூர் சென்று சந்திர பகவானை வழிபட்டால்
செல்வ வளம் பெருகும்.

திருவாதிரையில் பிறந்தவர்கள் சதுர்த்தசி திதி அல்லது மாத சிவராத்திரி
வரும் நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கினால் அபூர்வ
ராஜயோகம் உண்டாகும்.

புனர்பூசத்தில் பிறந்தவர்கள் நவமி நாட்களில் கும்பகோணம் சென்று
ஸ்ரீஇராமசாமியை தரிசனம் செய்தால் இனிய வாழ்க்கை உண்டாகும்.

ஒளி மிகுந்த பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பவுர்ணமி நாட்களில்
தென்குடி திட்டைசென்று ராஜகுருவை வணங்கினால் நல்ல முன்னேற்றம்
உண்டாகும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் காளஹஸ்தி சென்று ராகு காலத்தில் ராகு மற்றும் கேதுக்களை வணங்கினால் மணவாழ்க்கையில் நல்ல உயர்வு கிடைக்கும்.

மகம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானின் ஸ்தலமான
கஞ்சனூர் சென்று வழிபட்டால் செல்வச்செழிப்பு உண்டாகும்.

பூர நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சமயபுரம் சென்று மாரியம்மாளை
வழிபட்டால் நினைத்தது கைகூடும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சூரியனார் கோவில் சென்று சூரிய பகவானை வணங்கினால் நல்ல தொழில் வளம் உண்டாகும்.

அஸ்த நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை மாதந்தோறும் சபரிமலை சென்று
ஸ்ரீசாஸ்தாவை வணங்கினால் நலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ அங்காரகனை வழிபட்டு வர ஏற்றம் பல உண்டாகும்.

சுவாதியில் பிறந்தவர்கள் வாயுஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி சென்று ராகு காலத்தில்
இறை வழிபாடு செய்தால் இன்னல்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும்.

விசாக நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நாட்களில் பழனிக்குச் சென்று முருகனை
வழிபட்டால் உயர்வுகள் பல உண்டாகும்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் சென்று
ஸ்ரீரெங்க நாதரையும் தாயாரையும் தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

முல நட்சத்திரக்காரர்கள் திருப்பாம்புரம் சென்று ராகு காலத்தில் ராகு கேதுக்களை வழிபட்டால் இனிய இல்லறம் அமையும்.

பூராடம் நட்ச்த்திரக்காரர்கள் கார் காலங்களில் வருணன் வணங்கிய திரு அண்ணாமலையாரை வணங்கினால் செல்வ வளம் உருவாகும்.
உத்திராடம் நட்சத்திரக் காரர்கள் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் பிள்ளையார்பட்டி
சென்று விநாயக்கடவுளை வழிபட்டால் நலம் தரும் முன்னேற்றம் உண்டாகும்.

திரு ஓண நட்சத்திரக்காரர்கள் அவரது ஜன்ம நட்சத்திரத்தன்று திருப்பதி சென்று
ஏழுமலையானை வழிபட்டால் ஐசுவரியங்கள் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திரு நள்ளாறு சென்று
சனி பகவானை வழிபட்டால் தனம் பெருகும்.

சதயம் நட்சத்திரக் காரர்கள் அமாவாசை நாட்களில் ஸ்ரீவாஞ்சியம் சென்று யமதர்மனை வணங்கினால் நல்வழி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமைகளில் திருச்சி திரு வானைக்கா சென்று குபேர லிங்கத்தை தரிசனம் செய்தால் நல்ல தன விருத்தி உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று திருவாடுதுறை சென்று
ஸ்ரீகோமுக்தீஸ்வரரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திருக்கொள்ளிக்காடு சென்று
சனிபகவானை வணங்கினால் சிறப்புகள் பல உண்டாகும்.


உங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பாடல்கள்:பாகம் 3


நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010



மூலம்:

கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பூராடம்:

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம்:

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம்/ஓணம்:

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம் :
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம் :
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி:

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி:

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

ரேவதி:

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.

Tuesday, February 2, 2010

உங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பாடல்கள்:பாகம் 2


நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010

மகம்:

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம்:

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம்:

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.


அஸ்தம்:

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை:

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி:

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.


விசாகம்:

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம்:

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

கேட்டை:

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

உங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பாடல்கள்:பாகம் 1


நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010

அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

பரணி:
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.

கார்த்திகை/கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி:

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம்:

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாதிரை/ஆதிரை:

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம்:

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.


பூசம்:

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம்:

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே.

கி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா?


கி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா?

நிபுரு என்ற கிரகம் 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனையும் பூமியையும்
கடக்கும்.அந்தக் கிரகம் ஏறக்குறைய உஷ்ணத்திலும் வீரியத்திலும் இன்னொரு
சூரியனைப்போல் இருக்கும்.அந்தக்கிரகம் தனது சுற்றுப்பாதையில் பூமியைக்
கடக்கும்போது,பூமி தனது சுழற்சியை மூன்று நாட்களுக்கு நிறுத்திவிடும்.இதன்
காரணமாக,அந்த நாட்களில் நாம் சூரியனைப் பார்க்க முடியாது.அதே சமயம்,
பூமியில் நிலநடுக்கம்,ஆழிப்பேரலை என்ற சுனாமி போன்ற இயற்கைப்பேரழிவுகள்
நிகழும்.

அடுத்த வருடம் அதாவது இந்த நிபுரு கிரகத்தை நாம் வெறும் கண்ணாலேயே
பார்க்க முடியும்.21.12.2012 ஆம் தேதிதான் நிபுரு கிரகம் 3600 ஆண்டுக்கு
ஒரு முறை சூரியனையும் பூமியையும் கடக்க இருக்கும் தினம்.

கி.பி.1985 ஆம் ஆண்டில் ஒரு மகான் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள
பாதாளப்பொன்னியம்மன் கோவிலில் பிரசங்கம் செய்தார்.அவர் சொன்னது:
"கடவுள் பக்தி குறைந்து, பூமியில் தான,தர்ம காரியங்கள் அற்றுப்போய், கடலில்
ராட்சத அலைகள்(ஆழிப்பேரலை என்ற சுனாமி) 2012 ஆம் ஆண்டில்
தோன்றும்.சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதிகளை சுமார் 25 கி.மீ.தூரம்
கடல் கபளீகரம் செய்துவிடும்.
இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
எல்லோரும் இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.முதியோர்களை
முறையாகப் பராமரிக்க வேண்டும். தான தர்ம காரியங்களை தொடர்ந்து செய்து
ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இதன் மூலம் இந்தப் பேரழிவிலிருந்து
தமிழ்நாட்டைக் காப்பாற்றலாம்.

ஜோதிடரீதியாக 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் என்ன விதமான
அழிவுகளை பூமி சந்திக்கும்?
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் கூறுவது என்ன வென்றால்,2011 ஆகஸ்டு
மாதம் சனி பகவான் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் சஞ்சாரம்
செய்கிறார்.இது சனிக்கு ஆகாததால்,பூமிக்கு நிறைய பாதிப்பு வரலாம்.
15.10.2011 சனி வக்கிரத்தால் பூகம்பமும்,ஆழிப்பேரலை என்ற சுனாமியும்
ஏற்படக்கூடும்.
21.12.2011 இல் சனி கன்னியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
இதனால் தெற்காசிய நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.குறிப்பாக,இந்தியாவுக்கு
அதிக பாதிப்பு இருக்கும்.இயற்கை வளங்கள் அழியும்.பண்பாடு காலாச்சார
மாற்றங்கள் ஏற்படும்.இந்தியாவின் ஒரு பகுதி முழுமையாகப்பாதிப்படைந்து,
இந்தியாவின் மீது போர் திணிக்கப்படும்.மகாராஷ்டிரா,கோவா,தமிழ்நாடு அதிக
உயிர்ச்சேதங்களையும்,பொருட்சேதங்களையும் சந்திக்கும்.ஆக,
2011 இன் இறுதியில் இதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகி,2012 இல்
இயற்கைப்பேரழிவுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
நன்றி:திரிசக்தி பக்கம் 14 டூ17,பிப்ரவரி 1 - 15,2010.

நாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்கிரகணத்தன்று நிகழ்ந்த அதிசயம்

சூரியக் கிரகணத்தன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த ஒரு அதிசயம்

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள
தேப்பெருமாநல்லூரில் அருள்மிகு வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத
ஸ்வாமி திருக்கோயில் உள்ளது.இங்கு சென்ற சூரியக்கிரகணத்தன்று
நடந்த ஒரு சம்பவம் நிஜமான அதிசயமாகும்.

சுமார் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சூரியக்கிரகணம்
15.1.2010 வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.அன்று,இங்குள்ள மூலவரின்
அருகில் உள்ள ஐந்து வில்வ மரங்களில் ஒன்றில் ஒரு பாம்பு ஏறி
வில்வ இலை ஒன்றை எடுத்துக்கொண்டு,கீழே இறங்கி விஸ்வநாதர்
உள்ள கர்ப்பக்கிரகத்தை நோக்கிச் சென்றது.
இதற்குள் விஷயம் பரவி,அக்ரஹாரத்திலும் அக்கம்பக்கத்திலும் உள்ள
பக்தர்கள் திரளாகக் குழுமிவிட்டனர்.பக்தர்கள் கூட்டத்தைக் கண்டவுடன்
வாயில் வில்வ இலையுடன் எங்களை நோக்கிச் சீறிய படி வந்தது.
அதன் பிறகு, வில்வ இலையை வாயில் பிடித்தபடி ஊர்ந்து,அபிஷேகத்
தீர்த்தங்கள் வெளியேறும் துவாரம் வழியாக (கோமுகம்) உள்ளே புகுந்தது.
மிகச்சரியாக, சிவன் கருவறைக்குச் செல்லும் கோமுகத்தில் நுழைந்ததுதான்
ஆச்சரியம்.
ஆவுடையாரின் மீது ஏறி லிங்கபாணத்தின் மேல் வில்வ இலையை வைத்தது.
இதைப்பார்த்துப் பரவசப்பட்டனர் பக்தர்கள்.இச்சம்பவம் அனைத்தும்
காலை 9.30 மணி முதல் 11.00 மணிக்குள் நடந்துவிட்டது.

இந்த திருக்கோவில் தல புராணத்திலேயே சர்ப்பங்கள் இங்கு வந்து வழிபட்டதாக
கூறப்பட்டுள்ளன.(இந்த வரிகளை டைப் அடிக்கும்போது கெவுளி சப்தமிட்டது)
கயிலை மலையிலிருந்து அனந்தன், கார்கோடகன்,வாசுகி,சங்கபாலன்,குளிகன்,
மகாபத்மன்,தக்ஷன் ஆகிய ஏழு வகையான சர்ப்பங்களும், ராகுவும் கேதுவும்
கூட இந்த ஆலய சிவனை பூஜை செய்துள்ளன என்கின்றன புராணங்கள்.

நாகம் விஸ்வநாதரை வில்வ இலையைக் கொண்டு பூஜை செய்தது,
வெள்ளிக்கிழமை காலை ராகு கால வேளையில் நடந்திருக்கிறது.

வில்வ மரத்தில் முட்கள் நிறைய இருக்கும்.பாம்பின் தோல் மிக மிருதுவாக
இருக்கும்.அந்த முட்கள் கீறாமல் வில்வ இலையைப் பறித்து அது சிவலிங்கத்தை
பூஜித்தது என்றால், அது மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டு நடக்கக்
கூடிய அதிசயங்களில் ஒன்றுதான்.
நன்றி:திரி சக்தி பக்கம் 10 டூ 13,வெளியீடு பிப்ரவரி 1 - 15.

இந்தப்புத்தகம்
தற்போது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.நாகம் சிவலிங்கத்தின் மீது
வில்வ இலையை அர்ச்சித்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்டிக்கராக
இலவச இணைப்பாக தந்துள்ளனர்.

13.2.2010 வரை கடைகளில் கிடைக்கும்.வாங்கிப்
பாருங்கள்.புகைப்படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.


திரிசக்திக்கு இணைய தளம் இல்லை.எனவே,இணையத்தில் இது கிடைக்காது.

Saturday, January 30, 2010

கலிகாலத்தின் பரிணாம வளர்ச்சி:நன்றி தமிழ் வெப்துனியா 30.1.2010

சீனா: குழந்தை பெற்ற 9 வயது சிறுமி
பீஜிங் , சனி, 30 ஜனவரி 2010( 18:00 IST )


சீனாவில் 9 வயது சிறுமி ஒருத்தி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளாள்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த சாங்சுன் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில், சிசேரியன் மூலம் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

சீன சட்டப்படி 14 வயதுக்கு குறைவான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்தால் அது பாலியல் பலாத்கார குற்றமாகும்.இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக சட்ட உதவியை நாடியுள்ளதாக சாங்சுனிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்தோ அல்லது அந்த் சிறுமி யார் என்பது குறித்தோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ஷாங்காய் மருத்துவமனை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கருக்கலைப்பு செய்து இளம்பெண்களில் 30 % பள்ளி மாணவிகள் என்றும், இவர்களில் பாதிபேர் தொழிற் பயிற்சி பள்ளிகளிலும், மீதமுள்ளோர் கல்லூரிகளிலும் பயில்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை முடிந்தவுடனேயே இவ்வாறு கர்ப்பம் தரிக்கும் இளம்பெண்கள் அதிக அளவில் மருத்துவமனைக்கு வருவதாகவும், இதில் மூன்றில் ஒரு பகுதியினர் கர்ப்பம் உண்டாகி இடைநிலையிலோ அல்லது குழந்தை பிறக்கும் தருவாயிலோ வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அல்லது சீனாவில் இதுவரை 9 வயது சிறுமி குழந்தை பெற்றதாக தகவல் இல்லை.11 வயது சிறுமி குழந்தை பெற்றதாகத்தான் தகவல் உள்ளது.
நன்றி:தமிழ் வெப்துனியா 30.1.2010 நான் கேள்விப்பட்ட இந்துபுராணத்தகவல் என்னவெனில்,கலியுகத்தின் முடிவில் 10 வயதில் பேரன் பேத்தி பெற்றுக்கொள்ளுமளவிற்கு ஒழுங்கீனம் தலைவிரித்தாடும்.இந்த நிலையை நோக்கி பூமியுலக மக்களாகிய நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த தகவல் ஒரு ஆதாரம் .இது மட்டுமா? கலிகாலத்தில் காமசுகத்துக்காக மட்டுமே திருமணம் நடக்கும்.அளவற்ற காமம்,எக்கச்சக்கமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இந்த மூன்றையும் அடைவதற்கே ஒவ்வொரு மனிதனும் விரும்புவான்.அப்படி எவன் அல்லது எவளாவது விரும்பாமல் இருந்தாலும்,மற்றவர்கள் மேற்கூறிய மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஆடும் அகங்காரமான ஆட்டத்தால் அளவின்றி பாதிக்கப்படுவர்.அதன் முடிவாக,அவர்களும் அளவற்ற காமம்,ஏராளமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இவற்றில் ஏதாவது ஒன்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்நாள் செலவழியும். இப்போதே இதுதான் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகத்தில் நடக்கிறது என்கிறீர்களா?

சில பயனுள்ள ஆன்மீகத்தகவல்கள்



* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.

* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)

* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.

* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.

சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.

* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.

* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.

* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.

* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.

* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.

* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.

* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொட்டால் மூதேவியே பீடிப்பாள்.

* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.
நன்றி:www.vetham4u.blogspot.com